எல்ஐசி நிறுவனம் புதிய டேர்ம் பாலிசியான ’ஜீவன் அமர் பிளான்’
(LICs Jeevan Amar) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஐசி யின் (LIC) புதிய முழு ஆயுள் (டெர்ம் பிளான்) ,நீண்ட நாட்களாகவே ஆயுள் காப்பீடு
எடுப்பவர்களுக்கு ஏன் LIC யின் டெர்ம் பிளான் மற்ற காப்பீடு நிறுவனங்களை விட
பிரீமியும் தொகை அதிகமாகயுள்ளது என்ற சந்தேகம் இருந்து கொண்டு இருந்தது.அந்த
சந்தேகங்களை போக்கி நாம் அனைவரும் (LIC) எல்ஐசி யில் டேர்ம் பிளான்
எடுக்கு அளவுக்கு ஆடி தள்ளுபடி போன்று குறைந்த
பிரீமியும் தொகையுடன் அதிக
பட்ச்சமாக ஒருவரின் என்பது வயது வரை காப்பீடு எடுக்கும் வசதியை இந்த திட்டம் வழங்கியுள்ளது,மேலும் இதுவே பெண்களுக்கான
திட்டமாக இருந்தால் பிரீமியும் தொகை ஆண்களை விட மிக குறைவு.அதுமட்டும் அல்லாமல்
ஒரு தனிநபர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருந்தால் பிரீமியம்
தொகையில் தள்ளுபடியும் வழங்கியுள்ளனர்.வழக்கம் போலவே பிரீமியும் செலுத்தும்
காலத்தை ஒவ்வொரு தனிநபரின் விருப்பதிற்கு ஏற்றாற்போல் தேர்ந்து எடுத்து
கொள்ளலாம்.ஒரே தவணையாக செலுத்தும் (single ) முறையும் உள்ளன.இது போன்று ஒரே
தவணையாக செலுதுவர்களுக்கு பிற்காலத்தில் தேவைபட்டால் பாலிசியை திருப்பி கொடுத்து
விட்டு பணம் பெற்று கொள்ளும் சரண்டர் வாய்ப்பும் கொடுக்கபட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
- இப்பாலிசிகளின் ப்ரீமியத்தை பாலிசிகாலம் முழுவதும் செலுத்தலாம் அல்லது விரைவாக செலுத்தி முடிக்கலாம் அல்லது ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம்
- பாலிசிதாரர்கள் காப்பீட்டுக் காலம் முழுக்க ஒரே காப்பீட்டுத் தொகைய (level sum assured) தெரிவு செய்யலாம் அல்லது அதிகரிக்கும் முறையை தெரிவு செய்யலாம்.
- இந்த திட்டத்தில் துணை பாலிசி என்று சொல்ல கூடிய விபத்து காப்பீடு (Accidental Rider) கூடுதலாக சிறு தொகையை சேர்த்து செலுத்துவதன் மூலம் விபத்தினால் ஏதேனும் மரணம் ஏற்பட்டால் கூடுதலாக காப்பீடு கிடைக்கும்.
- புகை பிடிக்காதோருக்கு ப்ரீமியம் குறைவு போன்ற அம்சங்களும் உள்ளன.
- மற்ற எல்லா பாலிசிகளையும் போல இல்லாமல் பெண்களுக்கான பிரீமியம் ஆண்களின் ப்ரீமியத்தை விட குறைவு .
- குறைந்தபட்சகாப்பீட்டுத்
தொகை இந்த திட்டத்தில் ரூ.25 லட்சம்
ஆகும்.
உதாரணம்:
முப்பது வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இந்த
திட்டத்தில் சேர்ந்தால் எவ்வளவு பிரீமியும் தொகை என்று பார்த்தல் இருபத்தைந்து
லட்சத்திற்கு ரூ.6850 இதனோடு கூடுதலாக GST யும் சேர்த்து மொத்தம் ரூ.8083 செலுத்த வேண்டி
வரும்.ஒருநாளைக்கு ரூ.22 என எடுத்து கொள்ளலாம்.இதுவே பெண்களாக இருந்தால் ரூ.7021 மட்டுமே.இதுபோன்று உங்களின் வயதிற்கு ஏற்றார் போல் பிரிமியம்
தொகையை அறிந்து கொள்ள
No comments:
Post a Comment