September 29, 2024

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி? How to create free Mutual Fund account?

                  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு வங்கி கணக்கு, பான் கார்ட், ஆதார் கார்ட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இவை நான்கும் இருந்தால் மிக எளிதாக கணக்கை துவக்கி விடலாம்.

                மேற்கண்ட ஆவணங்களை வைத்து கேஒய்சி  அப்ளிகேஷனை மியூச்சுவல் ஃபண்ட் அப்ளிகேஷனும் சேர்த்து எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் கொடுத்து உங்கள் கணக்கை எளிதாக துவக்கி கொடுப்போம .

                அதாவது நீங்கள் முதல் முதலில் முதலீடு செய்பவராக இருந்தால் எங்களுடன் இலவச ஆலோசனை பெற்று உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு முதலீடு செய்ய தொடங்கலாம்

                . எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவராக இருந்தால் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கலாம் ஒரே தடவையாக முதலீடு செய்பவராக இருந்தால் 500 ரூபாயிலிருந்து  கணக்கு துவங்கலாம். இப்பொழுது டிஜிட்டல் இந்தியாவில் எந்தவித அப்ளிகேஷனும் நிரப்பாமல் ஆன்லைன் மூலமாக நாம் கணக்கை துவக்கி கொள்ள முடியும் .அதற்கு நாங்கள் அனுப்பும் கே ஒய் சி யை லிங்கை கிளிக் செய்து மேலே குறிப்பிட்ட ஆவணங்களையும் நீங்களே அப்லோட் செய்வதன் மூலமாக கே ஒய் சி ஆக்டிவேட் செய்ய முடியும்.

                 கே ஒய் சி ஆக்டிவேட் செய்த பிறகு நாம் மியூச்சுவல் பண்ட்  எந்த திட்டமாக இருந்தாலும் முதலீடு செய்ய முடியும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு தேவை இல்லை.

#9840044721 #mutualfundstamil #kyc #SIPTAMIL #freedemataccount #licipo #SBIMF

No comments:

Post a Comment