பரஸ்பரநிதியில் பங்குசந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து கிடைக்கும் நீண்டகால முதலீட்டு லாபத்திற்கு நீண்டகால அடிப்படையிலான ஆதாயத்துக்கு வரி இல்லாமல்
இருந்தது . ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஆதாயத்துக்கு வரி இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலான லாபத்துக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக ஒருவர் ஓர்
ஆண்டுக்காலத்தில் 1.5 லட்சம் ரூபாய் லாபம் அடைந்தால், ஒரு லட்சம் ரூபாய் போக மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாய்க்கு 10 சதவிகிதம் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும் என்ற புதிய வரி 2018 பட்ஜெட்டில் மீண்டும் அறிமுகபடுத்த பட்டு இருக்கிறது .இதனால் 31 ஜனவரி 2018 க்கு முன் செய்த முதலீட்டாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.1 பிப்ரவரி 2018முதல் முதலீடு செய்யப்படும் முதலிடுகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது முதலிட்டாளர்கள் மத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
Do you want to Invest In Mutual Fund and Mutual Fund related services SIP account Opening, KYC Update, Nomination Addition and Deletion, Transmission ,Capital Gain/loss report etc. மியூச்சுவல் ஃபண்ட், லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ,நிதி சார்ந்த அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.மேலும் எங்கள் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் ஏற்கனவே முதலீடு செய்து ஏதேனும் சேவை தேவை எனில் எங்களை தொடர்பு கொள்ளலாம். எஸ். தில்லை மகேந்திரன், +91 98400 44721
February 02, 2018
நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு வரி ! (Long Term Capital Gain Tax) 10% 2018-19
தேர்தலுக்கான பட்ஜெட்டா 2018-2019?
* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
* சம்பளதாரர்களுக்கு மருத்துவ மற்றும் போக்குவரத்திற்கு ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம்.
*நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு வரி( LTCG 10%) அறிமுகம்.
* சவுபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்
* உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும்.
* அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.
* சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு மானியம் 1.5 மடங்கு அதிகரிக்கப்படும்.
* அனைத்து துறைகளிலும் 12% புதிய ஊழியர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேசிய அளவில் புதிய உடல்நல பாதுகாபு திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன்படி 5 லட்சம் ரூபாய்க்கான குடும்ப மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
* ரயில்வ திட்டங்களுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் 80,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும்.
* குடியரசு தலைவரின் சம்பளம் 5 லட்சமாக உயர்த்தப்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எம்.பிக்களின் சம்பளம் உயர்த்தப்படும்.
* விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி.
* மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெறலாம்.
* அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்து இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்.
* மிக மோசமான நோய் பாதிப்புகளுக்கு ரூ. 1 லட்சம் வரை விலக்கு பெறலாம்.
Labels:
Did You Know?
Key Highlights About Union Budget 2018
Individuals and salaried class |
|
For senior citizens |
|
Other announcements |
|
Subscribe to:
Posts (Atom)