இந்த
உலகின்
மிக வயதான
மனிதர், இஸ்ரேல்
க்ரிஸ்டல் (Yisrael Kristal).
சமீபத்தில் இவர்
தனது 113-வது
வயதில் இஸ்ரேலில்
இறந்து போனார். இந்தச்
செய்தியைக்
கேள்விப்பட்டதும் மியூச்சுவல்
ஃபண்ட்
பிசினஸில் இருக்கும்
எனக்குள்
எழுந்த எண்ணம்,
நூறு ஆண்டுகள்
அல்லது அதற்கும்மேல்
நான்
உயிரோடு இருந்தால்
நான் என்னுடைய
நிதி நிலையை
எப்படிச் சமாளிப்பேன்
என்பதுதான்.
இது, நிச்சயம்
சவாலான ஒன்று.மனிதர்களாகிய
நம்முடைய
சராசரி வாழ்நாளானது
மருத்துவ அறிவியலின்
வளர்ச்சியாலும்,
தொழில்நுட்பத்தாலும் அதிகரித்துவிட்டது.
உலக
வங்கியின் அறிக்கையின்படி, 1960-ல் 52
வருடங்களாக
இருந்த மனிதனின்
சராசரி வாழ்நாள் 2015-ல் 72
வருடமாக
உயர்ந்திருக்கிறது. ஆனால்,
நம்முடைய
வாழ்நாள் உயர்ந்த
அளவுக்கு, அந்த
வாழ்நாளை மகிழ்ச்சியாகக்
கழிக்கும்
அளவுக்குத் தேவையான
செல்வம் அல்லது
பணத்தை உருவாக்கிக்கொள்ளும்
முயற்சி
என்பது நமக்குப்
போதாமல் இருக்கிறது.
இந்தச்
சவாலை
எதிர்கொள்ளவே, நாம்
நம்முடைய சேமிக்கும்
பழக்கத்தில்
பெரிய மாற்றத்தைக்
கொண்டுவர வேண்டியிருக்கிறது.
நம்
நாட்டில் சேமிப்பு
என்பது பாரம்பர்ய
மற்றும் உறுதியான
வருமானம் தரும்
திட்டங்களில்தான் பெரும்பாலும்
முதலீடு
செய்யப்பட்டு வருகிறது.
இவற்றில்
செய்யப்படும் முதலீடானது
நம்முடைய
வாழ்க்கைக்குத் தேவையான
அளவு
செல்வத்தைப் பெருக்குவதில்லை.
காரணம்,
இந்தத் திட்டங்கள்
மூலம் கிடைக்கும்
வட்டி வருமானம்
தொடர்ந்து குறைந்துவருகிறது.
இந்தப்
பிரச்னைக்கு
ஒரே தீர்வு,
நம்முடைய முதலீடுகளை
ஒரே
தொகுப்பாக வைத்திருக்காமல்
நமது
இலக்குகளுக்கேற்ப பிரித்து
முதலீடு
செய்வதே. அதாவது,
பங்குச் சந்தையோடு
ஒன்றிணைந்த முதலீட்டுத்
திட்டங்களான
மியூச்சுவல் ஃபண்ட்
திட்டங்கள் நம்முடைய
போர்ட்ஃபோலியோவில்
கட்டாயம் இருக்க
வேண்டும். ரெக்கரிங்
டெபாசிட்
திட்டம் போலவே,
மியூச்சுவல் ஃபண்டில்
மாதாமாதம்
ஒரு தொகையை
முதலீடு செய்யும்
திட்டம் உள்ளது.
அதுதான் எஸ்ஐபி(Systematic Investments Plan).
இதில் மாதம்
ரூ.500 முதல்
முதலீடு செய்ய
முடியும். தவணை
முதலீடு என்பதற்கு
மாறாக, நல்ல
முதலீட்டுத் திட்டமாக
எஸ்.ஐ.பி(SIP)
முதலீடு
இருக்கிறது.
மியூச்சுவல்
ஃபண்ட்
எஸ்.ஐ.பி(SIP)
முதலீட்டைப்
புரிந்துகொள்ள ஓர்
உதாரணத்துடன் அணுகலாம்.
நாம்
எஸ்.ஐ.பி
முறையில்
ரூ.500 முதல்
முதலீடு செய்யலாம்
என்று ஏற்கெனவே
சொன்னோம். என்றாலும்,
அந்த
முதலீட்டின் மகத்துவத்தை
அறிந்துகொள்ள
மாதமொன்றுக்கு ரூ.10,000-த்தை
எஸ்.ஐ.பி
மூலம்
ஈக்விட்டி சார்ந்த
ஃபண்டுகளில் முதலீடு
செய்வதாக
வைத்துக்கொள்வோம். இதில்
கிடைக்கும்
லாபமானது கூட்டு
வட்டி வளர்ச்சி
அடிப்படையில் 12% என
எடுத்துக்கொண்டால்,
அடுத்த 20 வருடங்களில்
அந்த
முதலீடு ஒரு
கோடி ரூபாயாக
வளர்ந்திருக்கும், 30 வருடங்களில்
ரூ.3.5
கோடியாக மாறும். எஸ்.ஐ.பி
முதலீட்டில்
கூடுதலாக ஒரு
அம்சம் உள்ளது.
அது ‘ஸ்டெப்
அப் எஸ்.ஐ.பி
அல்லது
டாப் அப்
எஸ்.ஐ.பி’
என்பது.
அதாவது, நிலையான
எஸ்.ஐ.பி
திட்டத்தில்
தொடர்ந்து ஒவ்வொரு
மாதமும் ஒரே
தொகையை முதலீடு
செய்வதற்குப் பதிலாக
நம்முடைய
வருமான வளர்ச்சிக்கேற்ப,
நமக்கு
வேண்டிய சமயத்தில்,
நம்முடைய எஸ்.ஐ.பி
முதலீட்டுத்
தொகையை நாம்
ஒவ்வொரு வருடமும்
அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
அதன்
அடிப்படையில் ஒவ்வொரு
வருடமும்
உங்களுடைய முதலீட்டுத்
தொகையான
ரூ.10 ஆயிரத்தில் 10%
அளவுக்கு
உயர்த்தி முதலீடு
செய்தால், அதே 12
சதவிகிதக் கூட்டு
வட்டி வருமான
அடிப்படையில் 20 ஆண்டுகளில்
உங்களுடைய
முதலீடு ரூ.1.58
கோடி ஆகவும், 30
ஆண்டுகளில் ரூ.6
கோடியாகவும் வளர்ச்சி
யடையும்.
இதுதான் கூட்டு
வட்டி வளர்ச்சி
என்னும் அதிசயம்.
முதலீட்டாளர்களின்
முதலீடுகள்,
நல்ல வருமான
வளர்ச்சியை அடைய
உதவும் வகையில்
மியூச்சுவல் ஃபண்ட்
துறையில் ‘பெர்பீச்சுவல்
எஸ்.ஐ.பி’ (Perpetual SIP)
என்னும்
நிரந்தர எஸ்.ஐ.பி
அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளது. இது,
நீண்ட கால
அடிப்படையில் தொடர்ந்து
தவறாமல்
முதலீடு செய்பவர்களை
உருவாக்குகிறது.
இன்றைக்கு
நாம்
செய்யும் பெரும்
பாலான முதலீடுகள்
செல்வத்தைப் பெருக்கும்
வாய்ப்புகளை
இழக்கக் காரணம்,
நாம் நம்முடைய
முதலீடுகளை நீண்ட
காலத்துக்குக் கூட்டு
வட்டி
அடிப்படையில் வளர்ச்சியடைய
அனுமதிக்காமல்
இருப்பதினால்தான். சரியான
தவணைத்
தேதியில் நாம்
நமது எஸ்.ஐ.பி
திட்டத்தைப்
புதுப்பிக்கத் தவறிவிடுவதே
இதற்கு
முக்கியக் காரணம்.
இதற்காகத்தான் ‘நிரந்தர
எஸ்.ஐ.பி’
என்கிற
முறை அறிமுகப்
படுத்தப்பட்டிருக்கிறது. நீண்ட
காலத்துக்குத்
தொடர்ந்து ஒழுங்காக
முதலீடு செய்ய
இந்த முறை
நமக்கு உதவுகிறது.
இந்த
நிரந்தர
எஸ்.ஐ.பி-யைத்
தொடங்கிபின்னர்
அதன் முதலீட்டுத்
தொகையை மாற்றவோ,
பணத் தேவைக்
காரணமாக தற்காலிகமாக
எஸ்.ஐ.பி
தவணையை
நிறுத்தி வைக்கவோ
அல்லது உங்களுடைய
முதலீட்டின் அலோகேஷனை
மாற்ற
நினைத்தாலோ என்ன
செய்வது என்று
நீங்கள் நினைக்கலாம்.
இவற்றில்
எந்தச் சிக்கல்களும்
இல்லை.
ஏனெனில், பெரும்பாலான
மியூச்சுவல்
ஃபண்டுகள் நம்மை
நீண்ட காலத்துக்கு
முதலீடு செய்ய
வைப்பதற்காகப் பல்வேறு
நெகிழ்வான
அம்சங்களை வைத்துள்ளன.
அவசரத்
தேவைகள் காரணமாக
உங்களுடைய மாதாந்திர
எஸ்.ஐ.பி
தவணையை
ஒன்று அல்லது
இரண்டு மாதங்களுக்குச்
செலுத்தத்
தவற நேர்ந்தால்,
சில ஃபண்டுகளில்
எஸ்.ஐ.பி
தவணையைத்
தற்காலிகமாக நிறுத்தி
வைக்கும்
வசதி உள்ளது.
மீண்டும் உங்களால்
முதலீடு செய்ய
முடியும்போது தொடர்ந்து
எஸ்.ஐ.பி
தவணைகளைச்
செலுத்தலாம். அதேபோல்,
உங்களுடைய
எஸ்.ஐ.பி
தொகையைக்
குறைக்கவும், அதிகரிக்கவும்
முடியும்.
சம்பள உயர்வு
வந்தாலோ, போனஸ்
கிடைத்தாலோ அந்தத்
தொகையை அதில்
முதலீடு செய்யலாம்.
அதேபோல், வேலையிலிருந்து
மாறினால்
சம்பளத் தேதி
மாறுகிறது என்றால்
எஸ்.ஐ.பி
தவணையைச்
செலுத்தும் தேதியை
மாற்றுவதென்றாலும் மாற்றலாம்.
அதற்காகப்
புதிதாக ஒரு
எஸ்.ஐ.பி
கணக்கைத்
தொடங்க தேவையில்லை.
ஆனால், நிரந்தர
எஸ்.ஐ.பி
திட்டத்தை
ஆரம்பிக்கும்முன், உங்கள்
முதலீட்டு
ஆலோசகரிடம் இந்த
வசதிகளெல்லாம் குறிப்பிட்ட
மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனத்தில்
அல்லது
ஃபண்டில் இருக்கின்றனவா
என்பதைப்
பற்றிக் கேட்டு
உறுதி செய்துகொள்ளவும்.
நிரந்தர
எஸ்.ஐ.பி.யின்
முக்கிய
நோக்கம், சில
தனிப்பட்ட காரணங்களால்
நம்முடைய
நீண்ட கால
முதலீடு பாதியிலேயே
நின்று விடக்கூடாது
என்பதற்காகத்தான். எனவே,
அவசியமில்லாமல்
இந்த வசதிகளைப்
பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
அப்போதுதான்
நாம் நம்முடைய
முதலீட்டின் கூட்டு
வளர்ச்சியின் பலன்களை
அனுபவிக்க
முடியும். நிரந்தர
எஸ்.ஐ.பி
முறைகள்
உங்களுடைய விருப்பத்துக்கேற்ப
முதலீடு
செய்து, உங்களுடைய
செல்வத்தைப் பெருக்கும்
பாதையை
நீங்கள் வகுத்துக்கொள்ளும்
வகையில்
உங்களுடைய முதலீட்டுக்கான
சுதந்திரத்தை
முழுமையாக உங்களுக்கு
அளிக்கிறது.
உடனடியாகத்
தொடங்கி,
நீண்ட காலம்
முதலீடு செய்வதுதான்
செல்வத்தைப்
பெருக்குவதில் உள்ள
முக்கியமான அம்சம்.
தாமதமாக ஆரம்பிப்பவர்கள்,
இலக்கை
அடைய அதிகமாக
முதலீடு செய்ய
வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு,
மாதமொன்றுக்கு
ரூ.10 ஆயிரத்தை 30
ஆண்டுகளுக்கு முதலீடு
செய்து,
ஆண்டுக்குச் சராசரியாக 12%
வருமான
வளர்ச்சி அடைந்தால்,
ரூ.3.53
கோடியாகக் கிடைக்கிறது.
ஆனால்,
இதே தொகை 10
ஆண்டுகளில் உங்களுக்குத்
தேவை
எனில், நீங்கள்
மாதம் ரூ. 1.5
லட்சத்தை முதலீடு
செய்ய வேண்டும்.
ரூ.10 ஆயிரத்தைக்
காட்டிலும், இது 15
மடங்கு அதிகமாகும்.
நீங்கள்
முக்கியமாகப்
புரிந்துகொள்ள வேண்டியது
இதுதான்.
ஒரு மரத்தை 20
ஆண்டுகளுக்குமுன் நட்டிருந்தால்
இன்றைக்குப்
பலன் தரும்;
இன்றைக்கு நட்டால்
இருபது ஆண்டுகளுக்குப்
பிறகு
பலன் தரும்.
இதுவரை மரத்தை
நீங்கள் நடவில்லை
எனில், இன்றே
நடுங்கள். கூட்டு
வட்டி வருமான
வளர்ச்சியின் அதிசயத்தினால்,
அடுத்த
இருபது ஆண்டுகளில்
அது பூத்துக்
குலுங்கும் மரமாக
வளர்ந்துவிடும். இதற்கு
நீங்கள்
கடைப்பிடிக்க வேண்டியது,
தொடர்ச்சியான
முதலீட்டு ஒழுக்கமும்
பொறுமையும்தான்.
பத்மஸ்ரீ
விருது
பெற்ற அஸ்ஸாம்
மாநிலத்தைச் சேர்ந்த
தனி
மனிதனான ஜாதவ்
பயேங், 1979-ல்
புல் பூண்டுகூட
முளைக்காத பாலை
வனத்தில் மரத்தை
நட ஆரம்பித்தார். 30
வருடங்களில்
அவர் பல
நூறு ஏக்கரில்
ஒரு பெரிய
காட்டையே உருவாக்கிவிட்டார்.
அந்த
அழகிய காட்டில்
இப்போது யானைகளும்,
மான்களும் வாழ்கின்றன.
ஜாதவ்
பயேங் செய்த
சிறு காரியம்
இன்று பெரும்
காடாய் வளர்ந்து
நிற்கிறது. உங்களுடைய
நிரந்தர
எஸ்.ஐ.பி
முதலீடு
அப்படிப்பட்ட வளர்ச்சியை
உங்களுக்குத்
தரும்!
தொகுப்பு:
ஜெ.சரவணன்
Source :- Nanayam Vikatan