November 04, 2017

மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பரநிதி) Mutual Fund சம்பந்தமான கேள்வி? பதில் .

மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் - அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்? 

                  அதிக பட்ச வரம்பு எதுவும் இல்லை,எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.ஆனால் சில நிறுவனங்கள் தங்களின் திட்டங்களின் வரைமுறையை பொறுத்து சில கட்டுபாடுகளை வைத்து உள்ளனர் .உதாரணமாக தற்போது ரிலையன்ஸ் ஸ்மால் கப் திட்டத்தில் அதிகபட்சம் ஐந்து லட்சம் மட்டும் முதலீடு செய்யமுடியும் .இதுபோன்று ஒரு சில திட்டங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

 

மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் - குறைந்தபட்சம்  எவ்வளவு முதலீடு செய்யலாம்?

                       குறைந்தபட்சம் ரூபாய் ரூ.500ல் யிருந்து முதலீடு செய்யலாம் என்று விளம்பரங்களில் நாம் பார்த்து இருப்போம்.ரூ 500 என்பது
இஎல்எஸ் எஸ் திட்டங்களிலும்  மற்றும் மாதம்தோறும் முதலீடு செய்யும் SIP  திட்டங்களுக்கும் பொருந்தும்.பொதுவாக ஒருமுறை மட்டும்  முதலீடு செய்யும் திட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.1000,ரூ.5000,ரூ.10000 என நிறுவனங்கள் வரைமுறையை வைத்துள்ளனர்.ஒரு சராசரி முதலீட்டாளர் ரூ .500 யை வைத்துகொண்டு மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடு செய்யமுடிம் என்பது ஒரு தனிச்சிறப்பு ஆகும்.

எனது வங்கி கணக்கில் பதினைந்து லட்சம் ரூபாய் உள்ளது இதை மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடு செய்யலாமா? அல்லது வீடு ,நிலம் வாங்கலாமா?                                     

                     எல்லோருக்கும் வீடு என்பது ஒரு கனவாக இருக்கும் பட்சத்தில் ஒரு வீடுவாங்கி அதில் குடியிருப்பது நல்ல முடிவாகும்.முதலீடு என்று வரும்போது  மியூச்சுவல்ஃ பண்ட  ஒரு சிறந்த திட்டமாகும்.

                      உதாரணமாக ஏற்கனவே உங்களுக்கு வீடு, நிலம் இருந்தால் மீண்டும் முதலீடாக  வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முதலீடாக நினைத்து வீடு ,நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது அல்ல;நிலத்தில் முதலீடு செய்துவரும் லாபத்தை விட மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் அதிகபட்சம் லாபம் கிடைக்கும் அதுமட்டும் அல்லாமல் இது போன்ற நிதி திட்டங்களில் முதலீடு செய்வது மிக எளிதாகவும்  தங்களது கணக்குகளை வீட்டில் இருந்து கொண்டு வயதான காலத்தில் மிக எளிதாகவும்  பராமரிக்க முடியும்.

எனக்கு  கிரிடிட் கார்ட் மூலமாக கடன் கிடைக்கிறது அதற்கான வட்டி 15% அதை வாங்கி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் 35 % மேல் லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்ளே? பாஸ்கரன் ,சேலம் . 

                        எப்பொழுதுமே கடன் வாங்கி முதலீடு செய்வதற்கு  நாங்கள் ஆலோசனை கொடுப்பது இல்லை .மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் ஒரு வேளை சந்தை இறங்கும் நிலை ஏற்பட்டு  உங்கள் முதலீடு 20 % குறைய நேர்ந்தால் இந்த 20% நஷ்டத்தையும் நீங்கள் கொடுக்கவேண்டி வரும்.ஆனால் கிரிடிட் கார்ட் வட்டி நிரந்தரமானது.அதுவே உங்களிடம் உள்ள பணமாக இருந்தால் சந்தை  மதிப்பு உயரும் வரை காத்து இருந்து லாபம் ஈட்டமுடியும்.

இதுபோன்று உங்களுக்கு  தேவையான சந்தேகங்களுக்கு எங்களுக்கு அனுப்பினால் பதில் இப்பகுதில் காணலாம்.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment