பான் கார்டு,ஆதார் கார்டு அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கபட்ட இருப்பிட சான்று ,ஒரு பாஸ்போட் அளவு புகைப்படம் இருந்தால் உங்கள் Mutual Fund கணக்கை தொடங்கி விடலாம்.இவை அனைத்தும் ஒரு முறை கொடுத்தால் போதும் உங்கள் KYC நிரந்தரமாக Mutual Fund நிறுவனங்களில் பதிவு செய்து கொள்வார்கள் .
அதன் பிறகு எந்த திட்டத்தில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் அதற்கு உங்களுடைய KYC விவரங்களை திரும்பகேட்பது இல்லை நம்முடைய பான் கார்டு எண்ணை கொடுத்தாலே நம்முடைய மியூச்சுவல்பண்ட்டில் முதலீடுகளை தொடங்கி விடலாம் .குறைந்தபட்சமாக 500 ரூபாயில் இருந்து முதலீடுகளை ஆரம்பிக்க முடியும்.இது கிட்டதட்ட வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்கை போன்றது எனலாம்,எப்பொழுது வேண்டும் என்றாலும் பணத்தை எடுத்து கொள்ளமுடியும் .ELSS என்று சொல்லகூடிய வரிசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் மட்டும் நாம் முதலீடு செய்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது .அதுமட்டும் அல்லாமல் Closed Ended திட்டங்களும் சந்தையில் உள்ளன இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்தாலும் குறிபிட்ட காலம் வரை அதாவது ஒன்று ,இரண்டு,மூன்று என திடங்களில் குறிப்பிட்ட காலம் வரை பணத்தை திரும்பபெறமுடியாது எனவே முதலீடு செய்யும் போது தங்களுக்கு வரிசேமிப்பு தேவை இல்லை எனில் Open End திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்த முடிவாகும்.
மியூச்சுவல்பண்டில் முதலீடு செய்தால் பணம் திரும்பி வராது,முழுவதும் பங்கு சந்தை சார்ந்த திட்டம் என்பன போன்ற தவறான எண்ணங்கள் புதிய முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவிவருகிறது.இதுபோன்று அச்சம் கொள்ள தேவை இல்லை இந்தியாவில் 42 க்கு மேல் மியூச்சுவல்பண்ட் நிறுவனங்கள் இருபது லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டாளர்கள் பணத்தை நல்ல முறையில் நிர்வகித்து கொண்டு இருக்கின்றனர் .சிறு துளி பெருவெள்ளம் என்பது போல கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து நீண்டகால தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளலாம்.
இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் உலகில் எந்த பகுதில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய மியூச்சுவல்பண்டில் முதலீடு செய்யலாம் .நீங்கள் முதல் முறையாக MUTUAL FUND திட்டங்களில் முதலீடு செய்வதற்கு தேவையான விண்ணப்பபடிவங்கள் எங்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.ஏற்கனவே KYC சரிபார்க்கபட்டவராக இருந்தால் எங்கள் நிறுவனத்தின் மூலமாக முதலீடை ஆரம்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கும்எங்களைதொடர்பு கொள்ளலாம் .Chennai,Tamil Nadu ,India 9840044721. https://www.youtube.com/watch?v=C-c_QAlYujQ&t=14s
No comments:
Post a Comment