April 22, 2022

மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வேண்டுமா? இந்த திட்டத்தில் சேருங்கள் அடல் பென்ஷன் யோஜனா


                  பாரதப் பிரதமர் நரேந்திர #மோடி அவர்களால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வு காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாகும் பாரத பிரதமர் இந்த திட்டத்தை அறிவித்த சில ஆண்டுகளிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அரசு ஊழியர்களுக்கு இன்றைய கால சூழ்நிலையில் பென்ஷன் திட்டம் கேரண்டீட் திட்டம் இல்லை  ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த குறைந்தபட்ச பென்ஷன் ஸ்கீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இளம் வயதில் நாம் ஓடி ஓடி உழைக்கலாம், சம்பாதிக்கலாம் ஆனால் வயதான காலத்தில் நமக்கு நிரந்தரமாக ஒரு பென்ஷன் வருமானம் தேவைப்படுகிறது அதற்கு இந்த திட்டம் சரியானதாக இருக்கும் 18 முதல் 40 வயது உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு உங்களுடைய வங்கி கணக்கு எந்த வங்கியில் உள்ளதோ அந்த வங்கியின் கிளைக்கு சென்று இந்த திட்டத்தின் பெயரை சொல்லி அதாவது அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய வேண்டும் என்று சொன்னால்  வங்கி அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள் கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து உங்களுக்கு மாதம் மாதம் எவ்வளவு தொகை உங்களால்  முதலீடு செய்ய முடியுமா அந்த தொகையை முதலீடு செய்து 60 வயதில் நீங்கள் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் கியாரன்டி உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷன் தொகையை பெற முடியும் அதே மாதிரி நீங்கள் செலுத்தக்கூடிய பணம் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு பணம் முதிர்வு தொகையாக கிடைக்கும்  என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம் அதற்கான அட்டவணையை நான் இங்கே கொடுத்துள்ளேன் இந்த அட்டவணையில் ஒவ்வொருவரும் வயதுக்கு ஏற்றவாறு அவர்களால் முடிந்த அளவு பிரீமியம் தொகை அதாவது மாதமாதம் செலுத்தக்கூடிய தொகை தேர்ந்தெடுக்கலாம் இந்தத் திட்டத்தின் சிறப்பு என்ன என்றால் இன்றைய கால சூழ்நிலையில் எந்த ஒரு திட்டமும் கேரண்டீட் அப்டினு உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷன் திட்டம் கிடையாது ஆனால் இந்தத் திட்டத்தில் நமக்கு 60 வயதில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை இன்று நாம் தீர்மானித்துக் கொள்ளலாம் இது திட்டம் முழுக்க முழுக்க உத்திரவாதம் தரக்கூடிய திட்டம் அதே சமயம் நமக்கு கிடைக்கக்கூடிய தொகை எவ்வளவு என்பதையும் வட்டியுடன் சேர்ந்த தொகை நம்முடைய காலத்திற்குப்பின் வாரிசுதாரர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை இன்றே உறுதி செய்து கொள்ள முடியும் . மேலும் விவரங்களுக்கு உங்கள் வங்கிக் கிளையை தொடர்பு கொள்ளவும். இந்த திட்டமானது போஸ்ட் ஆபீஸ் மூலமாகவும் தொடங்கலாம் வங்கிகள் கிளைகள் இல்லாத பகுதிகளில் போஸ்ட் ஆபீஸ் இருந்தால் அதன் மூலமாகவும் நீங்கள் இந்த கணக்கை துவங்கலாம் நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment