தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தால் நம்முடைய மொத்த பணத்தையும் இழக்க நேரிடும் இதற்கு ஆதாரமாக பத்திரிகைகளில் பல நிறுவனம் பல ஆயிரம் கோடிகளுக்கு மேலாக முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்ப செலுத்தவில்லை என்ற தகவலை நாம் பார்க்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்குச்சந்தை உள்பட பிற முதலீடுகளில் இருக்கும் ரிஸ்குகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இல்லை என்பதும் அது மட்டுமின்றி போட்ட முதலீட்டுக்கு லாபம் கிடைக்கின்றதோ இல்லையோ அசலுக்கு ஆபத்தில்லை என்ற நம்பிக்கையும் முதலீட்டாளர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த அனைத்து விளம்பரங்களிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என கூறப்பட்டிருக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்பதை தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது மொத்தமாக ஒரு முறை முதலீடு செய்வது மற்றும் SIP என்ற ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது என இரண்டு வகையாக உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 முதல் 12 சதவீதம் வரை லாபம் கொடுத்து வருவதால் இந்த முதலீட்டில் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.சந்தை அபாயம்
இருப்பினும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் விளம்பரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என கூறப்பட்டு வருகிறது. இந்த விளம்பரம் முதலீட்டாளர்களுக்கு அச்சதையும் ஏற்படுத்துகிறது அது என்ன என்பதை தற்போது பார்ப்போம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஐந்து வகையான ரிஸ்குகள் உள்ளன. அவை கிரெடிட் ரிஸ்க், பிசினஸ் ரிஸ்க், மார்க்கெட் ரிஸ்க், பிரைஸ் ரிஸ்க் மற்றும் லிக்விடிடி ரிஸ்க்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இந்த 5 வகை ரிஸ்க் இருந்தாலும் இந்த ஐந்துமே ஒரே நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் என கூற முடியாது. நாம் தேர்ந்து எடுக்கும் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்கு ஏற்ப ஒரு சில ரிஸ்க் இருக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நிதி மேலாண்மை குழு இந்த ரிஸ்குகளை சரியான முறையில் கையாண்டு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடும். நாம் எந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்துள்ளோம் என்பதை பொறுத்து இந்த ரிஸ்க் சார்ந்துள்ளது. சில முதலீடுகளில் அதிக ரிஸ்குகளும், சில முதலீடுகளில் குறைவான ரிஸ்குகளும் இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளை மேலாண்மை குழு நிபுணர்களின் உதவி, பரவலாக முதலீடு செய்தல் மற்றும் செபி அமைப்பின் ஒழுங்கு முறைகள் ஆகியவை ரிஸ்குகளை குறைக்க உதவும்.
முதலீட்டுக்கு ஆபத்தா?
இந்த நிலையில் பல முதலீட்டாளர்கள் கேட்கக் கூடிய முக்கியமான கேள்வி என்னவெனில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நாம் முதலீடு செய்த பணத்தை எடுத்து விட்டு ஓடி விடுமா? என்பது தான். செபி ஒழுங்கு முறையில் உள்ள கடுமையான விதிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் கட்டமைப்பு ஆகியவைகளை வைத்து பார்க்கும் போது இதற்கு சாத்தியமே இல்லை என்பதுதான் பொருளாதார அறிஞர்களின் கருத்தாக உள்ளது.
Mutual Fund Investments Subject to Market Risk .To Invest Whatsup 9840044721
No comments:
Post a Comment