November 04, 2017

மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பரநிதி) Mutual Fund சம்பந்தமான கேள்வி? பதில் .

மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் - அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்? 

                  அதிக பட்ச வரம்பு எதுவும் இல்லை,எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.ஆனால் சில நிறுவனங்கள் தங்களின் திட்டங்களின் வரைமுறையை பொறுத்து சில கட்டுபாடுகளை வைத்து உள்ளனர் .உதாரணமாக தற்போது ரிலையன்ஸ் ஸ்மால் கப் திட்டத்தில் அதிகபட்சம் ஐந்து லட்சம் மட்டும் முதலீடு செய்யமுடியும் .இதுபோன்று ஒரு சில திட்டங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

 

மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் - குறைந்தபட்சம்  எவ்வளவு முதலீடு செய்யலாம்?

                       குறைந்தபட்சம் ரூபாய் ரூ.500ல் யிருந்து முதலீடு செய்யலாம் என்று விளம்பரங்களில் நாம் பார்த்து இருப்போம்.ரூ 500 என்பது
இஎல்எஸ் எஸ் திட்டங்களிலும்  மற்றும் மாதம்தோறும் முதலீடு செய்யும் SIP  திட்டங்களுக்கும் பொருந்தும்.பொதுவாக ஒருமுறை மட்டும்  முதலீடு செய்யும் திட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.1000,ரூ.5000,ரூ.10000 என நிறுவனங்கள் வரைமுறையை வைத்துள்ளனர்.ஒரு சராசரி முதலீட்டாளர் ரூ .500 யை வைத்துகொண்டு மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடு செய்யமுடிம் என்பது ஒரு தனிச்சிறப்பு ஆகும்.

எனது வங்கி கணக்கில் பதினைந்து லட்சம் ரூபாய் உள்ளது இதை மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடு செய்யலாமா? அல்லது வீடு ,நிலம் வாங்கலாமா?                                     

                     எல்லோருக்கும் வீடு என்பது ஒரு கனவாக இருக்கும் பட்சத்தில் ஒரு வீடுவாங்கி அதில் குடியிருப்பது நல்ல முடிவாகும்.முதலீடு என்று வரும்போது  மியூச்சுவல்ஃ பண்ட  ஒரு சிறந்த திட்டமாகும்.

                      உதாரணமாக ஏற்கனவே உங்களுக்கு வீடு, நிலம் இருந்தால் மீண்டும் முதலீடாக  வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முதலீடாக நினைத்து வீடு ,நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது அல்ல;நிலத்தில் முதலீடு செய்துவரும் லாபத்தை விட மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் அதிகபட்சம் லாபம் கிடைக்கும் அதுமட்டும் அல்லாமல் இது போன்ற நிதி திட்டங்களில் முதலீடு செய்வது மிக எளிதாகவும்  தங்களது கணக்குகளை வீட்டில் இருந்து கொண்டு வயதான காலத்தில் மிக எளிதாகவும்  பராமரிக்க முடியும்.

எனக்கு  கிரிடிட் கார்ட் மூலமாக கடன் கிடைக்கிறது அதற்கான வட்டி 15% அதை வாங்கி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் 35 % மேல் லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்ளே? பாஸ்கரன் ,சேலம் . 

                        எப்பொழுதுமே கடன் வாங்கி முதலீடு செய்வதற்கு  நாங்கள் ஆலோசனை கொடுப்பது இல்லை .மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் ஒரு வேளை சந்தை இறங்கும் நிலை ஏற்பட்டு  உங்கள் முதலீடு 20 % குறைய நேர்ந்தால் இந்த 20% நஷ்டத்தையும் நீங்கள் கொடுக்கவேண்டி வரும்.ஆனால் கிரிடிட் கார்ட் வட்டி நிரந்தரமானது.அதுவே உங்களிடம் உள்ள பணமாக இருந்தால் சந்தை  மதிப்பு உயரும் வரை காத்து இருந்து லாபம் ஈட்டமுடியும்.

இதுபோன்று உங்களுக்கு  தேவையான சந்தேகங்களுக்கு எங்களுக்கு அனுப்பினால் பதில் இப்பகுதில் காணலாம்.

 

 

 

 

 

 

October 26, 2017

பரஸ்பரநிதியில்(Mutual Fund) திட்டங்களில் தனி நபர் முதலீடு செய்வது எப்படி?


பரஸ்பரநிதியில் (Mutual Fund) திட்டங்களில்முதலீடு செய்வதற்கு
1) பான்கார்டு நகல்
2)ஆதார் நகல்
3)ஏதேனும் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு
4)ஒரு பாஸ்போட் அளவு புகைப்படம் 
இருந்தால் உங்கள் பரஸ்பர நிதி (Mutual Fund) கணக்கை தொடங்கி விடலாம்.இவை அனைத்தும் ஒரு முறை கொடுத்தால் போதும்.அதன் பிறகு நீங்கள் அனைத்து பரஸ்பரநிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம் .குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 500 மட்டுமே.அதிகபட்சம் எவ்வளவு வேண்டும் என்றாலும் முதலீடு செய்யலாம்.உங்கள் அருகாமையில் உள்ள முகவர் மூலமாக முதலீடு பற்றிய தகவல்களை மேலும் விவரமாக அறிந்து முதலீடு செய்யுங்கள்.மேலும் பரஸ்பரநிதி பற்றி விவரம் அறிய +91 98400 44721

October 11, 2017

(Mutual Fund )பரஸ்பர நிதி திட்டத்தில் சேர, ஆரம்ப தொகை எவ்வளவு?

தினமும்  தொலைகாட்சி,செய்திதாள்,வானோலி போன்றவைகளில் தொடர்விளம்பரம் வந்து கொண்டு இருக்கிறது  பரஸ்பரநிதி திட்டத்தில் உயர்தர மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்ல, அடித்தட்டு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்கள் உள்ளன. 500 ரூபாயிலிருந்து கூட ஆரம்பிக்கலாம் என்று ஆனால் யாரை  போய்கேட்பது என்று தெரியவில்லை என்பவர்களுக்கு மேலும் விவரம் அறிய தொடர்புக்கு 9840044721.என்னை  போன்ற அரசாங்கத்தால் அனுமதிக்க பட்டமுகவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர் அவர்கள் மூலமாக முதலீடு செய்யலாம்.மேலும் முதலீடு சம்பந்த்தமான அனைத்து விவரங்களும் தமிழில் அறியலாம்.