June 19, 2018

How to Invest In Mutual Fund?

               பான் கார்டு,ஆதார் கார்டு அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கபட்ட இருப்பிட சான்று ,ஒரு பாஸ்போட் அளவு புகைப்படம் இருந்தால் உங்கள் Mutual Fund  கணக்கை தொடங்கி விடலாம்.இவை அனைத்தும் ஒரு முறை கொடுத்தால் போதும் உங்கள் KYC நிரந்தரமாக Mutual Fund நிறுவனங்களில் பதிவு செய்து கொள்வார்கள் .
               அதன் பிறகு எந்த திட்டத்தில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் அதற்கு உங்களுடைய KYC விவரங்களை திரும்பகேட்பது இல்லை நம்முடைய பான் கார்டு எண்ணை கொடுத்தாலே நம்முடைய மியூச்சுவல்பண்ட்டில்  முதலீடுகளை தொடங்கி விடலாம் .குறைந்தபட்சமாக 500 ரூபாயில் இருந்து முதலீடுகளை ஆரம்பிக்க முடியும்.இது கிட்டதட்ட வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்கை போன்றது எனலாம்,எப்பொழுது வேண்டும் என்றாலும் பணத்தை எடுத்து கொள்ளமுடியும் .ELSS என்று சொல்லகூடிய வரிசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் மட்டும் நாம் முதலீடு செய்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது .அதுமட்டும் அல்லாமல் Closed Ended திட்டங்களும் சந்தையில் உள்ளன இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்தாலும் குறிபிட்ட காலம் வரை அதாவது ஒன்று ,இரண்டு,மூன்று என திடங்களில் குறிப்பிட்ட காலம் வரை பணத்தை திரும்பபெறமுடியாது எனவே முதலீடு செய்யும் போது தங்களுக்கு வரிசேமிப்பு தேவை இல்லை எனில் Open End திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்த முடிவாகும்.
                     மியூச்சுவல்பண்டில் முதலீடு செய்தால் பணம் திரும்பி வராது,முழுவதும் பங்கு சந்தை சார்ந்த திட்டம் என்பன போன்ற தவறான எண்ணங்கள் புதிய முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவிவருகிறது.இதுபோன்று அச்சம் கொள்ள தேவை இல்லை இந்தியாவில் 42 க்கு மேல் மியூச்சுவல்பண்ட் நிறுவனங்கள் இருபது லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டாளர்கள் பணத்தை நல்ல முறையில் நிர்வகித்து கொண்டு இருக்கின்றனர் .சிறு துளி பெருவெள்ளம் என்பது போல கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து நீண்டகால தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளலாம்.
            இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் உலகில் எந்த பகுதில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய மியூச்சுவல்பண்டில் முதலீடு செய்யலாம் .நீங்கள் முதல் முறையாக MUTUAL FUND திட்டங்களில் முதலீடு செய்வதற்கு தேவையான விண்ணப்பபடிவங்கள் எங்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.ஏற்கனவே KYC சரிபார்க்கபட்டவராக இருந்தால் எங்கள் நிறுவனத்தின் மூலமாக முதலீடை ஆரம்பிக்கலாம்.
          மேலும் தகவல்களுக்கும்எங்களைதொடர்பு கொள்ளலாம் .Chennai,Tamil Nadu ,India 9840044721. https://www.youtube.com/watch?v=C-c_QAlYujQ&t=14s


        

April 28, 2018

மாதம் தோறும் ரூபாய் இரண்டு லட்சம் ஓய்வுதியமாக பெறலாம்!


                      மேலே பதிவிட்டுள்ள சிறுகுறுஞ்செய்தியை பலசமூகவலை தளங்கள் மூலமாகவும் மற்றும் எனது நண்பர்களுக்கும்அனுப்பிவைத்தேன் .அதில் பல கேள்விகளும் ,சந்தேகங்களும் கேட்டு இருந்தனர்.அதில் நிறைய பேர் ஒரே கேள்வியை கேட்டு இருந்தனர்.அது எப்படி சாத்தியம் ஆகும்?என்ன உத்திரவாதம் கொடுக்கமுடியுமா? அதற்கு சில விளக்கங்களை இங்கே  காணலாம்.
                   நான் 1997 சென்னையில் முதலீட்டு ஆலோசகராக வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தபோது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இருந்து  விற்பனை மேலாளர்கள் எங்களை சந்திப்பது உண்டு.இந்தியாவில் 1964 UTI 64 திட்டத்தின் மூலம் மியூச்சுவல் பண்டை அறிமுகபடுத்தி இருந்தாலும் 1997 க்கு பிறகு தான் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்தது.அந்த தருணங்களில் எங்களுக்கு அந்த மேலாளர்கள் நாங்கள் கேட்கும் பல சந்தேகங்களை தெளிவு படுத்துவார்கள் அதன் பிறகு நாங்கள் முதலீட்டாளர் களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முதலீடுகளை பெற்று வருவது வழக்கம்.ஆம்! அப்பொழுது அந்த மேலாளர்கள் கொடுத்த பதிவுதான் மேலே பதிவிட்டுள்ளேன்.
தமிழில்
'' மாதம் தோறும் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு மாதம் ரூ.2,00,000 கிடைக்கும் "

                       அப்பொழுது நாங்கள் அந்த விற்பனை மேலாளர்களிடம் கேட்ட கேள்விகளும் இன்று என்னிடம் இன்றைய முதலீட்டாளர்கள் மற்றும் நண்பர்கள்  கேட்கும் கேள்விகளும் அதற்கு நாங்கள் கூறும் பதில்களும் மாறவில்லை.அது மட்டும் அல்ல அன்று எங்கள் ஆலோசனை கேட்டு முதலீடு செய்தவர்களுக்கு இன்று அந்த கனவு நிஜமாக நடந்து கொண்டு இருக்கிறது.இது பற்றி மேலும் விவரங்களை இனிவரும் காலங்களில் பார்க்கலாம் .
                 பொதுவாக பண வீக்கம்(Inflation)  பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம்,அதை என்னுடைய அனுபவ ரீதியாக பார்க்கலாம்.1997ஆம் ஆண்டுகளில் இருந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்தியாவில் அதிக அளவில் சந்தை படுத்தபட்டன அதில் பொதுவாக கையாண்ட விற்பன்னை உத்திகள் என்று சொல்லும் போது   பண வீக்கம்(Inflation) சம்பந்தபடுதிதான் இருக்கும்.அந்த கால கட்டத்தில் நாங்கள் தனியார் நிறுவனங்களின் வைப்புத்தொகைகளை  முதலீட்டளார்களுக்கு கொடுத்து கொண்டு இருப்போம் ,அவர்கள் பெரும்பாலும் அறுபது வயதை தாண்டியவர்களாக இருப்பார்கள் அவர்களை சந்தித்து வைப்புத்தொகைகளை வாங்கி வருவது ஒரு கடிணமான வேலை என்றுதான் சொல்லவேண்டும்.அப்போது அந்த பெரியவர்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது அவர்களுடைய இளமை காலங்களில் மாத சம்பளம் ரூ.100,200 களில் கிடைக்கும் என்றும் பைசாவில் தான் எங்களுக்கு செலவு ஆகும் என்றும்,சென்னை கே.கே.நகரில் ஒரு கிரவுண்டு நிலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு இருந்தது என்று அவர்களுடையான உரையாடல் தொடர்ந்து கொண்டு இருக்கும் அந்த காலகட்டங்களில் அது ஒரு கதையாக தெரிந்தாலும் இன்று அது உண்மையாகவே உணரமுடிகிறது.ஆம் அதே போன்று ஒரு கதையை இன்றைய இளைய தலை முறைக்கு சொல்லவேண்டிய வயதில் நான் உள்ளேன் .பண வீக்கம்(Inflation) பற்றி விரிவாக விளக்குவதற்கு இந்த கதை நன்றாக இருக்கும் அடுத்த இருபது ஆண்டுகள் கழித்து பார்த்தால் நிஜமாக இருக்கும்.ஆம் இருபது ஆண்டுகளுக்கு (1997) முன் நான் கேட்ட கதையை உங்களுக்கு சொல்கிறேன்.படம் 1 யில் பண வீக்கம்(Inflation) பற்றி
படம் 1
விற்பன்னை மேலாளர்கள் எங்களுக்கு சொன்னது அதே விளக்கம் தான் இன்றைக்கும் .இன்னும் வரும் காலங்களுக்கும் definition மாறபோவது இல்லை.படம் 2 யில் விலை வாசி 1987க்கும் ,1997  உள்ள விலைவாசிக்கும் உள்ள மாற்றம்  எவ்வாறு உயர்ந்து உள்ளது என்பதை பார்க்கமுடியும் .அப்படியே ௧௯௯௭ யில் இருந்து இன்றைய விலைவாசியை ஒப்பிட்டு பாருங்கள் உதாரணமாக பெட்ரோல் விலை இன்று ரூ.80 எத்தனை 
படம் 2

மடங்கு  உயர்ந்து உள்ளது என்பதை பார்க்க முடியும்.இது போன்று மற்ற பொருள்களின் விலைகளையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் .இபொழுது .இதை எப்படி நாம் சமாளிக்க போகிறோம் என்பதை நாம் பார்க்கலாம்.1993 யில் இருந்து
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம் தோறும் ரூ .10000 முதலீடு செய்து வந்தால் இன்றைய சந்தை மதிப்பு எவ்வளவு தெரியுமா ?ரூபாய் எட்டு கோடியே நாற்பது லட்சம் ஆகும்.இது எப்படி சாத்தியம் என்பன போன்ற சந்தேகங்களை வரும் காலங்களில் ..    முதலீடு தொடரும் ...

April 19, 2018

Mutual fund என்றால் என்ன? How to invest money in mutual funds.





மேலும் தகவலுக்கும் முதலீடு செய்வதற்கும்  எங்களை தொடர்பு கொள்ளலாம் 9840044721