July 05, 2026

மியூச்சுவல் ஃபண்ட் SIP (Systematic Investment Plan)

 மியூச்சுவல் ஃபண்ட் SIP (Systematic Investment Plan) - ஓர் எளிய வழிகாட்டி 

              மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி (SIP) என்பது இன்று நடுத்தர வர்க்கத்தினர் இடையே மிகவும் பிரபலமாகி வரும் ஒரு முதலீட்டு முறையாகும். இது பணத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல், அதை பெருக்கவும் உதவுகிறது.
SIP என்றால் என்ன?
          SIP என்பதன் விரிவாக்கம் Systematic Investment Plan (முறையான முதலீட்டுத் திட்டம்) ஆகும். இது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு எளிய வழியாகும். 
  • மாதாந்திர முதலீடு: இதில் நீங்கள் மொத்தமாகப் பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.
  • சிறிய தொகை: மாதம் ₹100 அல்லது ₹1,000 என சிறிய தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.
  • தானியங்கி முறை: உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தேதியில் பணம் தானாகவே முதலீட்டுக்குச் சென்றுவிடும். 

SIP-ன் முக்கிய நன்மைகள்
  • கூட்டு வட்டியின் வலிமை (Power of Compounding): நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்யும்போது, உங்கள் அசலுக்கு மட்டுமின்றி, உங்களுக்குக் கிடைக்கும் வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். இது உங்கள் பணத்தைப் பல மடங்கு உயர்த்தும். 
  • ரூபாய் மதிப்பு சராசரியாதல் (Rupee Cost Averaging): பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்போது, சந்தை வீழ்ச்சியடையும் போது உங்களுக்கு அதிக மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் (Units) கிடைக்கும். சந்தை உயரும்போது குறைந்த யூனிட்டுகள் கிடைக்கும். இதனால் உங்கள் முதலீட்டுச் செலவு சராசரியாகக் குறைகிறது. 
  • முதலீட்டு ஒழுக்கம்: ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை முதலீட்டிற்குச் செல்வதால், உங்களிடம் திட்டமிட்ட சேமிப்புப் பழக்கம் மற்றும் நிதி ஒழுக்கம் வளர்கிறது.
  • நெகிழ்வுத்தன்மை (Flexibility): உங்கள் வசதிக்கேற்ப முதலீட்டுத் தொகையை எப்போது வேண்டுமானாலும் கூட்டவோ, குறைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தவோ முடியும்.

SIP-ஐ எவ்வாறு தொடங்குவது?
  1. KYC சரிபார்ப்பு: பான் கார்டு (PAN card) மற்றும் ஆதார் கார்டு (Aadhar card) மூலம் உங்கள் KYC விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  2. இலக்கைத் தீர்மானித்தல்: பிள்ளைகளின் கல்வி, திருமணம் அல்லது ஓய்வூதியம் போன்ற உங்கள் இலக்கிற்கு ஏற்ப ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  3. வங்கி கணக்கு இணைப்பு: முதலீட்டுத் தொகை தானாகவே கழிவாவதற்கு (Auto-debit) உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.

முடிவுரை
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் (5 முதல் 10 ஆண்டுகள்) SIP முறையில் முதலீடு செய்யும்போது நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, சிறு வயதிலேயே சிறிய தொகையுடன் SIP-ஐத் தொடங்குவது உங்கள் எதிர்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் சிறந்த முடிவாகும். மியூச்சுவல் திட்டங்களில் முதலீடு செய்வதற்க்கு எங்களை தொடர்பு கொள்ளவும் 9840044721 . 

December 26, 2025

காப்பீடு ஏன் அவசியம்?


சந்தையில்  பலதரப்பட்ட சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு வழிகளில்  லாபமும், உத்தரவாதங்களையும் கொண்டது. அந்த வகையில் 
காப்பீட்டை ஒரு  சிறந்த முதலீடு என்று நிரூபிப்பது எனது நோக்கம் அல்ல .
காப்பீடு தனித்துவமானது மற்றும் ஒப்பிட முடியாதது, ஏனெனில் அது மட்டுமே வாழ்க்கையின் சில அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. அதை  நீங்கள் தெளிவாக அடையாளம் கண்டு எடுத்து கொண்டால் உங்கள் நிதி இலக்கை அடைவது எளிதாகிவிடும்.

December 13, 2025

நீங்கள் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து விட்டீர்களா?

இந்திய பரஸ்பர நிதித் துறை (Mutual Fund) முக்கிய அம்சங்கள் (நவம்பர் 2025)

நவம்பர் 2025-க்கான இந்திய பரஸ்பர நிதித் துறையின் சராசரி நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் (AAUM): ₹81.32 லட்சம் கோடி (₹81,31,764 கோடி).

நவம்பர் 30, 2025 நிலவரப்படி மொத்த நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM): ₹80,80,370 கோடி (₹80.80 லட்சம் கோடி).

நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் வளர்ச்சி (10 ஆண்டுகள்): ₹12.95 டிரில்லியன் (நவம்பர் 30, 2015) முதல் ₹80.80 டிரில்லியன் (நவம்பர் 30, 2025) வரை – 6 மடங்குக்கு மேல் வளர்ச்சி.

நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் வளர்ச்சி (5 ஆண்டுகள்): ₹30.01 டிரில்லியன் (நவம்பர் 30, 2020) முதல் ₹80.80 டிரில்லியன் (நவம்பர் 30, 2025) வரை – ஏறக்குறைய 3 மடங்கு அதிகரிப்பு.

வரலாற்றுச் சிறப்புமிக்க நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் மைல்கற்கள்:

முதல் முறையாக ₹10 டிரில்லியனைக் கடந்தது: மே 2014.

₹20 டிரில்லியனைக் கடந்தது: ஆகஸ்ட் 2017.

₹30 டிரில்லியனைக் கடந்தது: நவம்பர் 2020.

₹80.80 டிரில்லியனை எட்டியது: நவம்பர் 2025.

மொத்த பரஸ்பர நிதி ஃபோலியோக்களின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது: மே 2021.

நவம்பர் 30, 2025 நிலவரப்படி ஃபோலியோக்களின் எண்ணிக்கை: 25.86 கோடி (258.6 மில்லியன்).

சில்லறை முதலீட்டாளர்கள் அதிகம் உள்ள ஃபோலியோக்கள் (பங்கு, கலப்பின, தீர்வு சார்ந்த திட்டங்கள்): 20.16 கோடி (201.6 மில்லியன்).

நவம்பர் 2025-க்கான SIP முதலீடுகள்: ₹29,445 கோடி (அக்டோபர் 2025-ல் ₹29,529 கோடியாக இருந்தது).

மேலும் #மியூச்சுவல்ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் திட்டங்களில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் பெற்று முதலீடு  செய்வதற்கு எங்களை தொடர்பு கொள்ளலாம் #9840044721.

Do you want to #invest in Mutual Fund call us 98400 44721.

September 29, 2024

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி? How to Invest in Mutual Fund?

                        மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது இப்போது மிகவும் எளிதாகவும் எளிமையாகவும் மாறிவிட்டது,  முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் தங்கள் KYC ஐ முதலில் முடிக்க வேண்டும், இது ஒரு முறை செயல்முறை ஆகும்.
 
                              KYC சரிபார்ப்பை முடிக்க உங்களுக்கு உதவ நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஆக செயல்பட்டு உங்களுக்கு KYC சரிபார்பை செய்து தருகிறோம்.
 
                 நீங்கள் உங்கள் KYC ஐ முடித்தவுடன், ஒவ்வொரு முதலீட்டிற்கும் கூடுதல் சரிபார்ப்பை மேற்கொள்ளாமல் எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிதி திட்டங்களை முதலீடு செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம்.
                            மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி சரி பார்ப்பிற்கு தேவையான ஆவணங்கள் பான் கார்டு ,ஆதார் கார்டு,ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போதுமானது. 
 
                    மேலும் இலவசமாக மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை துவக்குவதற்கு எங்களை தொடர்பு கொள்ளலாம் நாங்கள்  அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் எஸ் தில்லை மகேந்திரன் #9840044721.
 

                    Following Documents For New Mutual Fund Account

                    PAN Card

                    Aadahr Card

                    Passport Size Photo 1

                    Bank Detail (With Name Printed Cheque)


மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி? How to create free Mutual Fund account?

                  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு வங்கி கணக்கு, பான் கார்ட், ஆதார் கார்ட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இவை நான்கும் இருந்தால் மிக எளிதாக கணக்கை துவக்கி விடலாம்.

                மேற்கண்ட ஆவணங்களை வைத்து கேஒய்சி  அப்ளிகேஷனை மியூச்சுவல் ஃபண்ட் அப்ளிகேஷனும் சேர்த்து எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் கொடுத்து உங்கள் கணக்கை எளிதாக துவக்கி கொடுப்போம .

                அதாவது நீங்கள் முதல் முதலில் முதலீடு செய்பவராக இருந்தால் எங்களுடன் இலவச ஆலோசனை பெற்று உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு முதலீடு செய்ய தொடங்கலாம்

                . எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவராக இருந்தால் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கலாம் ஒரே தடவையாக முதலீடு செய்பவராக இருந்தால் 500 ரூபாயிலிருந்து  கணக்கு துவங்கலாம். இப்பொழுது டிஜிட்டல் இந்தியாவில் எந்தவித அப்ளிகேஷனும் நிரப்பாமல் ஆன்லைன் மூலமாக நாம் கணக்கை துவக்கி கொள்ள முடியும் .அதற்கு நாங்கள் அனுப்பும் கே ஒய் சி யை லிங்கை கிளிக் செய்து மேலே குறிப்பிட்ட ஆவணங்களையும் நீங்களே அப்லோட் செய்வதன் மூலமாக கே ஒய் சி ஆக்டிவேட் செய்ய முடியும்.

                 கே ஒய் சி ஆக்டிவேட் செய்த பிறகு நாம் மியூச்சுவல் பண்ட்  எந்த திட்டமாக இருந்தாலும் முதலீடு செய்ய முடியும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு தேவை இல்லை.

#9840044721 #mutualfundstamil #kyc #SIPTAMIL #freedemataccount #licipo #SBIMF

நோயில்லாமல் வாழ ஆறு எளிய வழிகள்

நோயில்லாமல்வாழஆறுவழிகள்..!!

1 - பசி
2 - தாகம்
3 - உடல் உழைப்பு
4 - தூக்கம்
5 - ஓய்வு
6 - மன அமைதி- 

பசி..

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா?? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்?

யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்?

உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தாகம்..

அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.

தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.

உடல்உழைப்பு..

ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

இதற்கு நீங்கள் முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்யுங்கள்.

உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.

தூக்கம்..

யாருக்கு தூக்கம் வரும்.? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.

ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.

இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.

நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.

இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.

நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.

ஓய்வு..

சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.

மனநிம்மதி

ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.

மனம் நிம்மதியாக இருக்க விருப்பத்துடன் வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.
நான் பார்க்கும் யாவரும், என்னை பார்க்கும் யாவரும் அனைத்து நலமும் வளமும் பெற வேண்டும் என்ற உணர்வெடுங்கள், எனது என்னம்,சொல்,செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும் என்று நினையுங்கள் .உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்கு சென்று இறைவனை பாடி வேண்டி வழிபடுங்கள்.அப்படி கோவிலுக்கு சென்று வழிபட வாய்ப்பு இல்லை எனில் வீட்டிலே சிறிது நேரம் விளக்கேற்றி வழிபடுங்கள்.

மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கியத்தை  அடைந்துவிட்டீர்கள்.

உடலில் ஒர் இல்லாத ஒன்று  இருக்கிறது அது சீர் பெற்றால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும் அது சீர் கெட்டால் உடல் முழுவதும் சீர் கெட்டு விடும் அது தான் மனம்.

உழைப்பே இதற்கு மூலாதாரம், ஆயினும் உழைக்கும் எண்ணம் இன்று அடியோடு குறைந்துபோனதுதான் நோயின் நுழைவாயில் என்பதை மறுப்பதற்கில்லை..

நலம் பெறுவோம் வளம் பெறுவோம்.இதையும் மீறி நமக்கு எதிர் பாரத நோய் ஏற்பட்டால் வரும் மருத்துவ  செலவை சமாளிக்க ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நோய் வரும் முன்னரே எடுத்து நமது பொருளாதார இழப்பை சமாளிக்கலாம்.இன்சூரன்ஸ் பாலிசி எடுபதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும். 98400 44721.

September 26, 2024

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? Mutual Fund Investments Subject to Market Risk

    தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தால் நம்முடைய மொத்த பணத்தையும் இழக்க நேரிடும் இதற்கு ஆதாரமாக பத்திரிகைகளில் பல நிறுவனம் பல ஆயிரம் கோடிகளுக்கு மேலாக முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்ப செலுத்தவில்லை என்ற தகவலை நாம் பார்க்க முடியும்.

     கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

      பங்குச்சந்தை உள்பட பிற முதலீடுகளில் இருக்கும் ரிஸ்குகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இல்லை என்பதும் அது மட்டுமின்றி போட்ட முதலீட்டுக்கு லாபம் கிடைக்கின்றதோ இல்லையோ அசலுக்கு ஆபத்தில்லை என்ற நம்பிக்கையும் முதலீட்டாளர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த அனைத்து விளம்பரங்களிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என கூறப்பட்டிருக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்பதை தற்போது பார்ப்போம்.

         மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது மொத்தமாக ஒரு முறை முதலீடு செய்வது மற்றும் SIP என்ற ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது என இரண்டு வகையாக உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 முதல் 12 சதவீதம் வரை லாபம் கொடுத்து வருவதால் இந்த முதலீட்டில் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.சந்தை அபாயம்

         இருப்பினும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் விளம்பரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என கூறப்பட்டு வருகிறது. இந்த விளம்பரம் முதலீட்டாளர்களுக்கு அச்சதையும் ஏற்படுத்துகிறது அது என்ன என்பதை தற்போது பார்ப்போம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஐந்து வகையான ரிஸ்குகள் உள்ளன. அவை கிரெடிட் ரிஸ்க், பிசினஸ் ரிஸ்க், மார்க்கெட் ரிஸ்க், பிரைஸ் ரிஸ்க் மற்றும் லிக்விடிடி ரிஸ்க்.

        மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இந்த 5 வகை ரிஸ்க் இருந்தாலும் இந்த ஐந்துமே ஒரே நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் என கூற முடியாது. நாம் தேர்ந்து எடுக்கும் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்கு ஏற்ப ஒரு சில ரிஸ்க் இருக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

        இருப்பினும் நிதி மேலாண்மை குழு இந்த ரிஸ்குகளை சரியான முறையில் கையாண்டு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடும். நாம் எந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்துள்ளோம் என்பதை பொறுத்து இந்த ரிஸ்க் சார்ந்துள்ளது. சில முதலீடுகளில் அதிக ரிஸ்குகளும், சில முதலீடுகளில் குறைவான ரிஸ்குகளும் இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளை மேலாண்மை குழு நிபுணர்களின் உதவி, பரவலாக முதலீடு செய்தல் மற்றும் செபி அமைப்பின் ஒழுங்கு முறைகள் ஆகியவை ரிஸ்குகளை குறைக்க உதவும்.

முதலீட்டுக்கு ஆபத்தா?

இந்த நிலையில் பல முதலீட்டாளர்கள் கேட்கக் கூடிய முக்கியமான கேள்வி என்னவெனில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நாம் முதலீடு செய்த பணத்தை எடுத்து விட்டு ஓடி விடுமா? என்பது தான். செபி ஒழுங்கு முறையில் உள்ள கடுமையான விதிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் கட்டமைப்பு ஆகியவைகளை வைத்து பார்க்கும் போது இதற்கு சாத்தியமே இல்லை என்பதுதான் பொருளாதார அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

Mutual Fund Investments  Subject to Market Risk .To Invest Whatsup 9840044721

 

 

September 25, 2024

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுபதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

Following Details Require to Buy New Health Insurance Policy.

All Member Aadhar Card with Date of Birth

Proposer PAN Card

Proposer Cheque Image

Proposer Email Id and Mobile No

Nominee Detail

All member Height and Weight.

For portability last 4-year policy documents require.

More about STAR Health Insurance Call Us S. Thillai Mahenthiran 98400 44721

 

Health History

Do you have any health problems? Yes/ No 

Has the person proposed for insurance ever suffered or suffering from any of the following?

Heart disease  

Yes/No

Stroke, epilepsy, fainting attack, chronic head ache, Parkinson disease, Alzheimers disease

Yes/No

Tuberculosis, asthma, other respiratory infections  

Yes/No

Disease of bones/joints, slipped disc, spinal disorder, injury to ligaments

Yes/No

Cancer, pre-cancerous lesions

Yes/No

Gynecological disorder such as DUB, fibroid uterus, ovarian cyst- or have undergone caesarian / hysterectomy

Yes/No

Treatment for sub fertility or has been advised for? (answer if applicable)

Yes/No

Disease of stomach, intestine liver, gall bladder/pancreas, kidney, urinary bladder, urinary tract diseases  

Yes/No

Disease of prostrate / fistula / piles / genital disease

Yes/No

Cataract and other diseases of the eye and ENT disease

Yes/No

Any other problem please specify

Yes/No

Has the person /s proposed for insurance

Undergone any medical test?

Yes/No

Prescribed any medicines?

Yes/No

Been advised for any surgery/treatment?

Yes/No

Received/receiving any payment for any disability/injury/illness/diseases  

Yes/No

Does the person proposed for insurance?

Chew Tobacco. If yes, since when

Yes/No

Smoke. If yes, since when

Yes/No

Consume Alcohol. If yes, since when?

Yes/No

Is the person proposed for insurance positive for HIV?

Yes/No

 

March 20, 2024

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த முதலீட்டாளர் இறந்து விட்டால் எப்படி அவருடைய வாரிசுகள் உரிமைகோருவது?How to claim Mutual Fund death Claim?

             மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது நாம் தனி நபராகவும் அல்லது ஜாயிண்ட் ஹோல்டராகவும் விண்ணப்பிக்க முடியும் அதற்குப் பிறகு நாமினி வேண்டுமென்றால் இணைத்துக்கொள்ளலாம் அல்லது வேண்டாம் என்றாலும் எனக்கு வேண்டாம் என்று உறுதி அளித்து நம்மளுடைய முதலீடை துவங்கலாம் இதுபோன்று சூழ்நிலையில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் இறந்துவிட்டால் அந்த குடும்பத்தின் உடைய வாரிசுதார எப்படி உரிமை கூற முடியும் அதற்கு உண்டான வழிகள் என்ன சட்டதிட்டங்கள் என்பதை இந்த கட்டுரையில் நாம் காணலாம்.

1. 2வது மற்றும்/அல்லது 3வது வைத்திருப்பவர் இறந்தால் இறந்த யூனிட் வைத்திருப்பவர்களின் பெயர்களை நீக்குதல்

  • இறந்த 2வது மற்றும்/அல்லது 3வது உரிமையாளரின் பெயரை நீக்கக் கோரி உயிர் பிழைத்திருக்கும் யூனிட்ஹோல்டரிடமிருந்து படிவத்தைக் கோருங்கள் .
  • ஒரு நோட்டரி பப்ளிக் அல்லது கெஜட்டட் அதிகாரியால் முறையாக சான்றளிக்கப்பட்ட அசல் அல்லது நகல்களில் இறப்புச் சான்றிதழ்.
  • புதிய வங்கி ஆணைப் படிவத்துடன் ஏற்கனவே உள்ள வங்கிக் கணக்குச் சான்று மற்றும் புதிய வங்கிக் கணக்கின் ரத்து செய்யப்பட்ட காசோலை (தற்போதுள்ள வங்கி ஆணையில் மாற்றம் இருந்தால் மட்டுமே).
  • எஞ்சியிருக்கும் யூனிட் வைத்திருப்பவர்களால் பரிந்துரைக்கப்படாவிட்டால் அல்லது ஏற்கனவே உள்ள நியமனத்தில் மாற்றம் இருந்தால் புதிய நியமனப் படிவம்.
  • ஏற்கனவே KYC இணங்கவில்லை எனில், எஞ்சியிருக்கும் யூனிட் வைத்திருப்பவரின் (கள்) KYC.
  • மொழிபெயர்க்கப்பட்ட நகல், NAM இந்தியா அசல் பார்த்த மற்றும் சரிபார்க்கப்பட்ட முத்திரையுடன், உள்ளூர் மொழியில் ஆவணங்கள்

2. 1 வது வைத்திருப்பவர் இறந்தால் உயிர் பிழைத்திருக்கும் யூனிட் வைத்திருப்பவருக்கு (கள்) அலகுகளை அனுப்புதல்.

  • எஞ்சியிருக்கும் யூனிட் ஹோல்டர்/களுக்கு யூனிட்களை அனுப்புவதற்கான டிரான்ஸ்மிஷன் கோரிக்கைப் படிவம் .
  • இறந்த யூனிட்ஹோல்டரின் இறப்புச் சான்றிதழின் அசல் அல்லது புகைப்பட நகல் ஒரு நோட்டரி பப்ளிக் அல்லது கெஜட்டட் அதிகாரியால் முறையாக சான்றளிக்கப்பட்டது.
  • உயிர் பிழைத்திருக்கும் கூட்டு வைத்திருப்பவரின் (கள்) பான் கார்டின் நகல் (ஏற்கனவே பான் எண் வழங்கப்படவில்லை என்றால்)
  • புதிய முதல் யூனிட்ஹோல்டரின் ரத்துசெய்யப்பட்ட காசோலை, உரிமைகோருபவரின் பெயர் முன்பே அச்சிடப்பட்ட அல்லது புதிய முதல் உரிமையாளரின் சமீபத்திய வங்கி அறிக்கை/பாஸ்புக் (3 மாதங்களுக்கு மேல் இல்லை).
  • ஏற்கனவே KYC இணங்கவில்லை எனில், எஞ்சியிருக்கும் யூனிட் வைத்திருப்பவரின் (கள்) KYC.
  • மொழிபெயர்க்கப்பட்ட நகல், NAM இந்தியா அசல் பார்த்த மற்றும் சரிபார்க்கப்பட்ட முத்திரையுடன், உள்ளூர் மொழியில் ஆவணங்கள்

3. ஒரே நபர் அல்லது அனைத்து யூனிட் ஹோல்டர்களும் இறந்தால் பதிவு செய்யப்பட்ட நாமினி/களுக்கு யூனிட்களை அனுப்புதல்

  • நாமினி(களுக்கு) ஆதரவாக யூனிட்களை அனுப்புவதற்கான டிரான்ஸ்மிஷன் கோரிக்கைப் படிவம் .
  • இறந்த யூனிட்ஹோல்டரின் இறப்புச் சான்றிதழின் அசல் அல்லது புகைப்பட நகல் ஒரு நோட்டரி பப்ளிக் அல்லது கெஜட்டட் அதிகாரியால் முறையாக சான்றளிக்கப்பட்டது.
  • பிறப்புச் சான்றிதழின் நகல், பரிந்துரைக்கப்பட்டவர் மைனராக இருந்தால்.
  • நாமினி(கள்) / பாதுகாவலரின் பான் கார்டின் நகல் (நாமினி மைனராக இருந்தால்)
  • நாமினி(கள்) / பாதுகாவலரின் KYC (நாமினி மைனராக இருந்தால்).
  • முன்-அச்சிடப்பட்ட நாமினியின் பெயருடன் ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது நாமினியின் சமீபத்திய வங்கி அறிக்கை/பாஸ்புக்கின் நகல் (இது 3 மாதங்களுக்கு மேல் இல்லை).
  • பரிமாற்றத் தொகை ₹2 லட்சம் வரை இருந்தால், இணைப்பு-1a இன் படி வங்கி மேலாளரால் நாமினியின் கையொப்பம் சான்றளிக்கப்பட்டது . பரிந்துரைக்கப்பட்டவர் மைனராக இருந்தால், காப்பாளரின் கையொப்பம் (மைனரின் வங்கிக் கணக்கு அல்லது பாதுகாவலருடன் மைனரின் கூட்டுக் கணக்கின்படி) சான்றளிக்கப்படும். பரிமாற்றத் தொகை ₹2 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், செயல்பாட்டு இடர் குறைப்பு நடவடிக்கையாக, TRFல் கையொப்ப சான்றளிப்பதற்காக வழங்கப்பட்ட இடத்தில், நோட்டரி பப்ளிக் அல்லது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முதல் வகுப்பு (JMFC) மூலம் நாமினியின் கையொப்பம் சான்றளிக்கப்படும். உரிமைகோருபவரின் கையொப்பத்திற்கு கீழே.
  • மொழிபெயர்க்கப்பட்ட நகல், NAM இந்தியா அசல் பார்த்த மற்றும் சரிபார்க்கப்பட்ட முத்திரையுடன், உள்ளூர் மொழியில் ஆவணங்கள்

4. ஒரே யூனிட்ஹோல்டர் அல்லது அனைத்து யூனிட்ஹோல்டர்களின் மரணத்தின் போது உரிமைகோருபவர்/களுக்கு யூனிட்களை அனுப்புதல், அங்கு நியமனம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

  • உரிமைகோருபவருக்கு அலகுகளை அனுப்புவதற்கான பரிமாற்றக் கோரிக்கைப் படிவம்
  • இறந்த யூனிட்ஹோல்டரின் இறப்புச் சான்றிதழ் அசல் அல்லது புகைப்பட நகல் ஒரு நோட்டரி பப்ளிக் அல்லது கெஜட் அதிகாரியால் முறையாக சான்றளிக்கப்பட்டது.
  • உரிமை கோருபவர் மைனராக இருந்தால் பிறப்புச் சான்றிதழின் நகல்.
  • உரிமைகோருபவர் / பாதுகாவலரின் PAN கார்டின் நகல் (உரிமைகோருபவர் மைனராக இருந்தால்).
  • உரிமைகோருபவர் / பாதுகாவலரின் KYC (உரிமைகோருபவர் மைனராக இருந்தால்)
  • உரிமைகோருபவரின் பெயருடன் ரத்துசெய்யப்பட்ட காசோலை முன் அச்சிடப்பட்ட அல்லது உரிமைகோரியவரின் சமீபத்திய வங்கி அறிக்கை/பாஸ்புக்கின் நகல் (இது 3 மாதங்களுக்கு மேல் இல்லை).
  • மொழிபெயர்க்கப்பட்ட நகல், NAM இந்தியா அசல் பார்த்த மற்றும் சரிபார்க்கப்பட்ட முத்திரையுடன், உள்ளூர் மொழியில் ஆவணங்கள்
    • பரிமாற்றத் தொகை ₹2 லட்சம் வரை இருந்தால் –

      • இணைப்பு-1a இன் படி வங்கி மேலாளரால் உரிமைகோருபவரின் கையொப்பத்தின் வங்கி சான்றளிப்பு . உரிமை கோருபவர் மைனராக இருந்தால், பாதுகாவலரின் கையொப்பம் (மைனரின் வங்கிக் கணக்கு அல்லது பாதுகாவலருடன் மைனரின் கூட்டுக் கணக்கின்படி) சான்றளிக்கப்படும்.
      • இறந்த யூனிட்ஹோல்டருடன் உரிமைகோருபவர்/களின் உறவை நிரூபிக்கும் ஏதேனும் பொருத்தமான ஆவணம்.
      • இழப்பீட்டுப் பத்திரம் - இணைப்பு II → இன் படி, சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் இல்லாமல் அலகுகளை அனுப்புவதற்கு சட்டப்பூர்வ வாரிசுகளால் வழங்கப்பட வேண்டும். சட்டப்பூர்வ வாரிசு(கள்)/உரிமைகோருபவர்(கள்) வாரிசுச் சான்றிதழ் அல்லது உயில் அல்லது நிர்வாகக் கடிதத்தை சமர்ப்பிக்கும் பட்சத்தில், உரிமைகோருபவர் பயனாளியாக பெயரிடப்பட்டால், அத்தகைய சட்டப்பூர்வ வாரிசு/உரிமைகோருபவர் (உரிமைகோருபவர்) இணைப்பு III இன் படி உறுதிமொழிப் பத்திரம் கள்) மட்டும் போதுமானதாக இருக்கும்; அதாவது, இழப்பீடு பத்திரம் தேவையில்லை.
      • இணைப்பு III e இன் படி ஒவ்வொரு சட்டப்பூர்வ வாரிசும் வழங்க வேண்டிய தனிப்பட்ட உறுதிமொழிகள் . பொருந்தக்கூடிய இணைப்பு IV இன் படி மற்ற சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து NOC .

      பரிமாற்றத் தொகை ₹2 லட்சத்திற்கு மேல் இருந்தால் –

      • உரிமைகோருபவரின் கையொப்பம் உரிமைகோருபவரின் கையொப்பத்திற்கு கீழே TRF இல் கையொப்பம் சான்றளிக்க வழங்கப்பட்ட இடத்தில் நோட்டரி பப்ளிக் அல்லது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முதல் வகுப்பு (JMFC) மூலம் முறையாக சான்றளிக்கப்பட்டது. உரிமை கோருபவர் மைனராக இருந்தால், பாதுகாவலரின் கையொப்பம் (மைனரின் வங்கிக் கணக்கு அல்லது பாதுகாவலருடன் மைனரின் கூட்டுக் கணக்கின்படி) சான்றளிக்கப்படும்.
      • இணைப்பு III இன் படி ஒவ்வொரு சட்டப்பூர்வ வாரிசுக்கும் தனிப்பட்ட உறுதிமொழிப் பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்
      • கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்று:
        • ✓ நன்னடத்தை உயிலின் நோட்டரிஸ் செய்யப்பட்ட நகல்; அல்லது

          ✓ தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழ்; அல்லது

          ✓ இன்டஸ்டேட் வாரிசு வழக்கில் நிர்வாகக் கடிதம் அல்லது நீதிமன்ற ஆணை.

5. இந்து பிரிக்கப்படாத குடும்பத்தின் (HUF) கர்த்தா இறந்தவுடன் கர்தாவின் மாற்றம்

HUF இன் விஷயத்தில், HUF இன் சொத்து கர்த்தாவால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் கர்தாவின் மரணம் ஏற்பட்டால் HUF முடிவுக்கு வராது. அத்தகைய சூழ்நிலையில், HUF இன் உறுப்பினர்கள் ஒரு புதிய கர்தாவை நியமிக்க வேண்டும், அவர் பரிமாற்றத்திற்கு பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:

  • பதிவு செய்யப்பட்ட கர்தாவின் மறைவுக்குப் பிறகு கர்தாவை மாற்றுவதற்கான விண்ணப்பப் படிவம் .
  • இறந்த கர்தாவின் இறப்புச் சான்றிதழின் அசல் அல்லது புகைப்பட நகல் ஒரு நோட்டரி பப்ளிக் அல்லது கெஜட் அதிகாரியால் முறையாக சான்றளிக்கப்பட்டது.
  • புதிய கர்தாவின் கையொப்பம் மற்றும் விவரங்கள் HUF இன் வங்கிக் கணக்கில் புதுப்பிக்கப்பட்டதாக சான்றளிக்கும் வங்கியின் கடிதம் மற்றும் இணைப்பு-1b இன் படி புதிய கர்தாவின் கையொப்பத்தை சான்றளிக்கிறது
  • .
  • புதிய கார்டாவின் KYC மற்றும் HUF (KYC இணங்கவில்லை என்றால்).
  • இணைப்பு-V இன் படி, எஞ்சியிருக்கும் அனைத்து காப்பர்செனர்களாலும் (புதிய கார்டா உட்பட) கையொப்பமிடப்பட்ட இழப்பீட்டுப் பத்திரம்.
  • இறந்த கர்தாவுடன் புதிய கர்தா மற்றும் பிற கோபார்செனர்களின் உறவை நிரூபிக்கும் எந்த ஒரு பொருத்தமான ஆவணமும்.
  • மொழிபெயர்க்கப்பட்ட நகல், NAM இந்தியா அசல் பார்த்த & சரிபார்க்கப்பட்ட முத்திரையுடன், வடமொழி மொழியில் ஆவணங்கள்.

6. HUF இன் கர்த்தா இறந்தவுடன் உரிமைகோருபவர்/களுக்கு யூனிட்களை அனுப்புதல், அங்கு எஞ்சியிருக்கும் இணை-பார்செனர் அல்லது HUF கர்தாவின் மறைவுக்குப் பிறகு கலைக்கப்பட்டது/பகிர்வு செய்யப்பட்டது

  • உரிமைகோருபவருக்கு அலகுகளை அனுப்புவதற்கான பரிமாற்றக் கோரிக்கைப் படிவம் .
  • இறந்த கர்தாவின் இறப்புச் சான்றிதழின் அசல் அல்லது புகைப்பட நகல் ஒரு நோட்டரி பப்ளிக் அல்லது கெஜட் அதிகாரியால் முறையாக சான்றளிக்கப்பட்டது.
  • உரிமை கோருபவர் மைனராக இருந்தால் பிறப்புச் சான்றிதழின் நகல்.
  • உரிமைகோருபவர்(கள்) / பாதுகாவலரின் PAN கார்டின் நகல் (உரிமைகோருபவர் மைனராக இருந்தால்).
  • உரிமைகோருபவர்(கள்) / பாதுகாவலரின் KYC (உரிமைகோருபவர் மைனராக இருந்தால்).
  • உரிமைகோருபவரின் பெயருடன் ரத்துசெய்யப்பட்ட காசோலை முன் அச்சிடப்பட்ட அல்லது உரிமைகோரியவரின் சமீபத்திய வங்கி அறிக்கை/பாஸ்புக்கின் நகல் (இது 3 மாதங்களுக்கு மேல் இல்லை).
  • பரிமாற்றத் தொகை ₹2 லட்சம் வரை இருந்தால், இணைப்பு-1a இன் படி வங்கி மேலாளரால் உரிமைகோருபவரின் கையொப்பத்தை சான்றளிக்கவும் . உரிமை கோருபவர் மைனராக இருந்தால், காப்பாளரின் கையொப்பம் (மைனரின் வங்கிக் கணக்கு / பாதுகாவலருடன் மைனர்களின் கூட்டுக் கணக்கின்படி) சான்றளிக்கப்படும்.
  • பரிமாற்றத் தொகை ₹2 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், உரிமைகோருபவரின் கையொப்பம் உரிமைகோருபவர்களின் கையொப்பத்திற்குக் கீழே TRF இல் கையொப்பம் சான்றளிக்க வழங்கப்பட்ட இடத்தில் நோட்டரி பப்ளிக் அல்லது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முதல் வகுப்பு (JMFC) மூலம் சான்றளிக்கப்படும்.
  • இணைப்பு VI இன் படி உரிமைகோரியவரால் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுப் பத்திரம் .
  • கர்தாவின் மறைவுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் உறுப்பினர்களால் HUF கலைக்கப்பட்டிருந்தால்/பகிர்வு செய்யப்பட்டிருந்தால், பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மட்டுமே அலகுகள் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்.
    • → செட்டில்மென்ட் பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகல், அல்லது

      → பகிர்வு பத்திரத்தின் அறிவிக்கப்பட்ட நகல், அல்லது

      → தொடர்புடைய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் ஆணையின் நோட்டரிஸ் செய்யப்பட்ட நகல்.


  • மொழிபெயர்க்கப்பட்ட நகல், NAM இந்தியா அசல் பார்த்த மற்றும் சரிபார்க்கப்பட்ட முத்திரையுடன், உள்ளூர் மொழியில் ஆவணங்கள்

தெளிவுபடுத்தல்கள்

  • மைனராக இருக்கும் உரிமைகோருபவருக்கு யூனிட்கள் அனுப்பப்பட வேண்டிய இடத்தில், KYC, PAN, வங்கி விவரங்கள், இழப்பீடு போன்ற பல்வேறு ஆவணங்கள் நாமினியின் பாதுகாவலரிடம் இருக்க வேண்டும்.
  • பரிமாற்ற ஆவணங்கள் மேட்ரிக்ஸ் இணைப்பு பி

For mutual fund #deathclaim #transmission whats Up 9840044721