மார்ச் 29, 2024

செய்திகள்

  • இந்த நிதியாண்டில்(2023 - 2024) நாளை மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில் வங்கிகள்,காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படும்.

பிப்ரவரி 12, 2024

தங்க பத்திர முதலீட்டு திட்டம் Sovereign Gold Bond Scheme 2023 -2024 Series 4

தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதற்கு பதிலாக மத்திய அரசு சாவரின் கோல்டு பாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் தொடங்கப்பட்டத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சாவரின் கோல்டு பாண்டுகள் வெளியிடப்படும். தேவை இருப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.இந்த நிலையில் இன்று பிப்ரவரி 12ம் தேதி சாவரின் கோல்டு பாண்டை வெளியிட உள்ளது. இதில் பிப்ரவரி 16ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இந்த காலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பிப்ரவரி 21ம் தேதி அதற்கான பத்திரங்கள் வழங்கப்படும். அதாவது பிப்ரவரி 12 முதல் 16ம் தேதி வரை முதலீடு செய்ய விரும்புகிறவர்கள். இதில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்த சாவரின் கோல்டு பாண்ட் சான்றிதழ் பிப்ரவரி 21ம் தேதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவரின் கோல்ட் பாண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஸ்மால் பேங்க், பேமெண்ட் பேங்க் ஆகியவற்றை தவிர்த்து வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL), கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCIL), நியமிக்கப்பட்ட தபால் அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் மூலம் வாங்காலம். அதாவது, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆகியவற்றிலும் இந்த சாவரின் கோல்ட் பாண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.எங்கள் மூலமாகவும் டிஜிட்டல் முறையில் முதலீடு செய்யலாம்.ஒவ்வொரு சாவரின் கோல்ட் பாண்டும் ஒரு கிராம் அளவில் வெளியிடப்படும். அதன் மடங்குகளில் தேவைக்கு ஏற்ப வாங்கி கொள்ளலாம். இதன் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும். ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தேவையெனில் முதலீட்டை வெளியே எடுக்கலாம். இந்த முதலீட்டு காலத்தில் ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் வட்டியும் கிடைக்கும். 6 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வரவு வைக்கப்படும்.

 

 Definitions of investor-categories are stated in the link below https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/SGBN08122023_English.pdf For further details related to upcoming SGB Issue, kindly refer RBI link stated below. The same is available in public domain of RBI website : https://rbidocs.rbi.org.in/rdocs/notification/PDFs/SGBCIRCULAR202324H29FCBFB59688C4E75AD00969142631E72.PDF #sovereigngoldbonds 

#gold

#goldinvestment 

 #rbi