நவம்பர் 09, 2017

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள 15 நிமிட இலவச பயிற்ச்சி !

 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள 15  நிமிட இலவச பயிற்ச்சி !
                                         நம்முடைய சேமிப்புகளை வங்கி,நிலம்,தங்கம் என பல இடங்களின் முதலீடு செய்து வருகிறோம்.இதில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மியூச்சுவல் ஃ பண்ட திட்டங்களின் முதலீடு அதிகரித்தது வருகிறது என்பத பத்திரிக்கை செய்தியின் வாயிலாக அறியலாம்.அந்த செய்தியின் படி இதுவரை ரூபாய்  20 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை பெற்று  நிர்வகித்து வருகின்றன.மியூச்சுவல் ஃ பண்ட  திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை எங்கள் அலுவலகத்திற்கு வந்தும் ,தொலை பேசி  மூலமாகவும்  அல்லது உங்கள் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு நாங்கள் நேரிடையாக வந்தும் விளக்கி கூறகிறோம்.இந்த அறிமுக சந்திபிற்கும் எந்த கட்டணமும் வசூலிப்பது இல்லை.மேலும் 25 நபர்கள்க்கு  மேல் குழுக்களாகவும் இலவச  பயிற்ச்சி வகுப்புகள் நடத்த தயாராக இருக்கிறோம்.

எங்கள் ஆலோசனைகளை பெற்று எங்கள் நிறுவனத்தின் மூலமாகவும் அல்லது உங்கள் விருப்பமான நிறுவனம்,முகவர்,ஆலோசகர் மூலமாக முதலீடு செய்யலாம்.

உதாரணமாக இது போன்ற  கேள்விகளுக்கு ஒரு நல்ல பதிலை பெற்று  நீங்கள் முதலீட்டு லாபம் பெறலாம்..

     மியூச்சுவல் ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

     எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
     நல்ல லாபம் தரும் ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி?
     யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றது?
     எஸ்ஐபி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன?
    போர்ட்ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்?
                          போன்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த முக்கிய விஷயங்கள் கற்றுத் தரப்படும்.
மேலும் விவரம் அறிந்து கொள்ள +91 98400 44721

நவம்பர் 04, 2017

மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பரநிதி) Mutual Fund சம்பந்தமான கேள்வி? பதில் .

மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் - அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்? 

                  அதிக பட்ச வரம்பு எதுவும் இல்லை,எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.ஆனால் சில நிறுவனங்கள் தங்களின் திட்டங்களின் வரைமுறையை பொறுத்து சில கட்டுபாடுகளை வைத்து உள்ளனர் .உதாரணமாக தற்போது ரிலையன்ஸ் ஸ்மால் கப் திட்டத்தில் அதிகபட்சம் ஐந்து லட்சம் மட்டும் முதலீடு செய்யமுடியும் .இதுபோன்று ஒரு சில திட்டங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

 

மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் - குறைந்தபட்சம்  எவ்வளவு முதலீடு செய்யலாம்?

                       குறைந்தபட்சம் ரூபாய் ரூ.500ல் யிருந்து முதலீடு செய்யலாம் என்று விளம்பரங்களில் நாம் பார்த்து இருப்போம்.ரூ 500 என்பது
இஎல்எஸ் எஸ் திட்டங்களிலும்  மற்றும் மாதம்தோறும் முதலீடு செய்யும் SIP  திட்டங்களுக்கும் பொருந்தும்.பொதுவாக ஒருமுறை மட்டும்  முதலீடு செய்யும் திட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.1000,ரூ.5000,ரூ.10000 என நிறுவனங்கள் வரைமுறையை வைத்துள்ளனர்.ஒரு சராசரி முதலீட்டாளர் ரூ .500 யை வைத்துகொண்டு மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடு செய்யமுடிம் என்பது ஒரு தனிச்சிறப்பு ஆகும்.

எனது வங்கி கணக்கில் பதினைந்து லட்சம் ரூபாய் உள்ளது இதை மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடு செய்யலாமா? அல்லது வீடு ,நிலம் வாங்கலாமா?                                     

                     எல்லோருக்கும் வீடு என்பது ஒரு கனவாக இருக்கும் பட்சத்தில் ஒரு வீடுவாங்கி அதில் குடியிருப்பது நல்ல முடிவாகும்.முதலீடு என்று வரும்போது  மியூச்சுவல்ஃ பண்ட  ஒரு சிறந்த திட்டமாகும்.

                      உதாரணமாக ஏற்கனவே உங்களுக்கு வீடு, நிலம் இருந்தால் மீண்டும் முதலீடாக  வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முதலீடாக நினைத்து வீடு ,நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது அல்ல;நிலத்தில் முதலீடு செய்துவரும் லாபத்தை விட மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் அதிகபட்சம் லாபம் கிடைக்கும் அதுமட்டும் அல்லாமல் இது போன்ற நிதி திட்டங்களில் முதலீடு செய்வது மிக எளிதாகவும்  தங்களது கணக்குகளை வீட்டில் இருந்து கொண்டு வயதான காலத்தில் மிக எளிதாகவும்  பராமரிக்க முடியும்.

எனக்கு  கிரிடிட் கார்ட் மூலமாக கடன் கிடைக்கிறது அதற்கான வட்டி 15% அதை வாங்கி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் 35 % மேல் லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்ளே? பாஸ்கரன் ,சேலம் . 

                        எப்பொழுதுமே கடன் வாங்கி முதலீடு செய்வதற்கு  நாங்கள் ஆலோசனை கொடுப்பது இல்லை .மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் ஒரு வேளை சந்தை இறங்கும் நிலை ஏற்பட்டு  உங்கள் முதலீடு 20 % குறைய நேர்ந்தால் இந்த 20% நஷ்டத்தையும் நீங்கள் கொடுக்கவேண்டி வரும்.ஆனால் கிரிடிட் கார்ட் வட்டி நிரந்தரமானது.அதுவே உங்களிடம் உள்ள பணமாக இருந்தால் சந்தை  மதிப்பு உயரும் வரை காத்து இருந்து லாபம் ஈட்டமுடியும்.

இதுபோன்று உங்களுக்கு  தேவையான சந்தேகங்களுக்கு எங்களுக்கு அனுப்பினால் பதில் இப்பகுதில் காணலாம்.